ஐயா வணக்கம். என் பெயர் மே. ம. நாராயணன் நாதஸ்வர கலைஞர். எனது ஊர் மேல்சாணாங்குப்பம்.. நான் 20 வருடங்களாக நாதஸ்வரம் வாசித்து வருகிறேன். முதலில் ஆம்பூர் சரவணன் அண்ணார் அவர்களிடம் நாதஸ்வரம் பயின்று வந்தேன். அடுத்து வேலூர் V.P.N. ராஜாராமன் அண்ணார் அவர்களிடமும் அடுத்து கலைமாமணி அடையார் S. ஜெயராமன் அண்ணாவிடம் சில காலம் பயின்று வந்தேன். அடுத்து நாதஸ்வரம் வித்வான் கலைமாமணி மாம்பலம் M. K. S. நடராஜன் அண்ணாவிடம் நாதஸ்வரம் பயின்று வந்தேன். திருச்செந்தூர் போன்ற புகழ்பெற்ற திருக்கோயில்களில் கச்சேரி வாசித்துள்ளேன்.