ஐயா வணக்கம் என் பெயர் ம.ஜெகன்குமார். நாதஸ்வர கலைஞர் எனது ஊர் மேல்சாணாங்குப்பம்.நான் கடந்த 8 வருடங்களாக நாதஸ்வரம் வாசித்து வருகிறேன்.நான் முதலாவதாக எனது மாமா நாதஸ்வரம் வித்வான் மேல்சாணாங்குப்பம் M.M.நாராயணன் அவர்களிடம் நாதஸ்வரம் படித்தேன்.. அதன்பிறகு நாதஸ்வர வித்துவான் கலைமாமணி மாம்பலம் Dr.M.K.S.நடராஜன் அண்ணாவிடம் சில காலம் நாதஸ்வரம் பயின்று வந்தேன். நான் திருச்செந்தூர் போன்ற புகழ்பெற்ற கோயில்களில் கச்சேரி வாசித்துள்ளேன்.